பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு

தந்தையை இழந்த சிறுவர்களைப் பராமரித்து வருகின்ற பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டல் கருத்தரங்கொன்று வாமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பெப்ரவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற இக்கருத்தரங்கை வாமியின் சிறுவர்கள் பராமரிப்புப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த்து.

இதிலே வாமி நிறுவனத்தினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பிள்ளைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட சுமார் 40 பேர் கலந்து பயன்பெற்றனர். பிள்ளைகளுக்கு வழிகாட்ட முன்பு பிள்ளைகளின் உடல், உள்ளம் பற்றிய அடிப்படை விடயங்களை பொறுப்பாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற வகையில்பிள்ளை, கட்டிளமைப் பருவத்தினரை பயிற்றுவிக்கின்ற போது அவதானிக்க வேண்டிய உளவியல் அனுகுமுறைகள்என்ற தலைப்பில் விரிவுரை இடம்பெற்றது. இதனை அஷ்ஷைய்க் ரவூப் ஸெய்ன் நடாத்தி வைத்தார். இவ்விரிவுரையைத் தொடர்ந்து வருகை தந்திருந்தோரின் வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் கடந்த வருடம் மிகச் சிறப்பாக செயற்பட்ட மூன்று பொறுப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)