ஜும்ஆ பிரசங்கத்தை எவ்வாறு அமைக்க வேண்டும்

வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஒரு நாள் கருத்தரங்கொன்றை வாமி நிறுவனம் கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி கேகாளை ஜும்ஆ பள்ளிவாசலில் நடாத்தியது. கேகாளை பள்ளிவாசல்கள் சம்மேளனத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கேகாளை மாவட்ட கதீப்மார் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர்.

காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இக்கருத்தரங்கு மாலை 5 மணி வரை இடம்பெற்றது. முதலாவது விரிவுரை உஸ்தாத் எம்..எம். மன்ஸூரினால் நடாத்தப்பட்டது. ”ஜும்ஆவுக்கு சமூகம் தரும் அனைவரும் சுமார் 30 நிமிடங்கள் அமைதியாக இருந்து கதீபின் பிரசங்கத்தை செவிமடுக்கின்றனர். எனவே, கதீப் மிகவும் பொறுப்பாக இருந்து பிரசங்கத்தை சிறந்த முறையில் தயாரித்து முன்வைப்பது அவரது கடமையாகும். கதீப் விடும் சிறிய தவறு மக்களின் பிழையான நடத்தைக்குக் காரணமாக அமையும்என்று உஸ்தாத் கூறினார்.

அதனைத் தொடர்ந்து வாமி பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் மனிதனது ஆற்றல்கள்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக presentation skill ”ஒரு குத்பாவை எவ்வாறு முன்வைக்கலாம்என்ற தலைப்பில் இஸ்மாயில் அஸீஸ் குழுக் கலந்துரையாடலை நடாத்தினார்.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)