வாமி தம்மாம் காரியாலய உயர் அதிகாரிகளின் வருகை

வாமி நிறுவனத்தின் கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான கலாநிதி அஹ்மத் பின் அல் உவைஸின் தலைமையில் ஒரு குழுவினர் இலங்கை வாமி நிறுவனத்துக்கு கடந்த மே மாதம் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

சட்ட உறுப்பினர் கலாநிதி அஹ்மத் புஆத் பின் முகம்மது பின் அப்துல் அஸீஸ் அல் மாஜித், சட்ட உறுப்பினர் கலாநிதி ஸாலிஹ் பின் அப்துர் ரஹ்மான் அல் யூஸுப், கலாநிதி முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் அல் சுஐபி, உஸ்தாத் பஹ்த் பின் அலி மற்றும் உஸ்தாத் முஹம்மத் பின் அஹ்மத் அல் உவைஸ் ஆகியோரே இக்குழுவில் இடம்பெற்றனர்.

இக்கழுவினருக்கும் இலங்கைக்கான ஸவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் பின் அப்துர் ரஹ்மானுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கலாநிதி அஹ்மத் பின் அல் உவைஸ் நினைவுச் சின்னம் ஒன்றை கௌரவ தூதுவருக்கு கையளித்தார். மேலும் நீதியமைச்சர் ரவூப் ஹகீமுடனான சந்திப்பொன்றும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்து.

வாமி காரியாலயத்துக்கு சமூகம் தந்த அக்குழுவினர் வாமியின் செயற்பாடுகள் மற்றும் அடைவுகள் பற்றி அறிந்துகொண்டதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்கியது. வாமியின் ஆலோசனை சபை உறுப்பினர்கள், இஸ்லாமிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய இஸ்லாமிய அறிஞர்களுடான ஒரு கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. இதிலே இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. அதேவேளை, முஸ்லிம்களின் தனியார் சட்டம், முஸ்லிம்களுக்கான தனியான நீதிமன்ற ஒழுங்கு போன்ற விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் நீதிபதிகள், சட்டத்தரணிகளுடனான விஷேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் வாமியின் தாஈக்கள், ஆசிரியர்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டு அதிலே பல வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

வாமி கல்விப் பிரிவினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற திறமையான மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உபதேசங்களை வழங்கினர். அத்துடன் அக்குழுவினர் மலே முஸ்லிம்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றிலும் ஈடுபட்டனர்.

embassy

parliament

vip meeting

volunteers

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)