இளைஞர் மேம்பாட்டு முகாம்

இளைஞர்களுக்கான இரண்டு நாள் முகாம் ஒன்று ஜூன் 1, 2 ஆம் திகதிகளில் பொலன்னறுவ சேனபுர அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. வாமி கல்விப் பிரிவு நடாத்திய இம்முகாமில் சுமார் 45 உயர் தர மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆம், என்னால் முடியும் என்ற தலைப்பில் டாக்டர் ஹுஸ்னி ஜாபிரும் இளைஞர்களது கடமைகளும் பொறுப்புக்களும் என்ற தலைப்பில் அஷ்ஷைய்க் எம்.டீ.எம். நுஸ்ரதும் ”சிறந்த தொடர்பாடல்” என்ற தலைப்பில் எஸ்.எச்.எம். முஸ்தபாவும் விரிவுரைகளை நடாத்தினர். அத்துடன் வாமி நிறுவன பிரதபிப் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷைய்க் எச்.எல்.எம். ஹாரிஸ் வாமி நிறுவனத்தையும் அதன் நோக்கங்களையும் தெளிவு படுத்தினார்.

இம்முகாமில் கலந்துகொண்டோருக்கு இறுதியாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)