அரபு மத்ரஸா மாணவர்களுக்கு ஊடக கருத்தரங்கு

குருநாகல் பிரதேச அரபு மத்ரஸாக்களில் இறுதி வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஊடக கருத்தரங்கு ஒன்றை வாமி ஊடகப் பிரிவு நடாத்தியது. ஸியம்பலாகஸ்கொடுவ அந்நூர் அரபு கல்லூரியில் ஜூன் 24 ஆம் திகதி இடம்பெற்ற இக்கருத்தரங்கில் குருநாகல் பிரதேச ஏழு மத்ரஸாக்களைச் சேர்ந்த சுமார் 65 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

”இஸ்லாமிய நோக்கில் ஊடகம்” என்ற தலைப்பில் அஷ்ஷைய்க் எம். நவாஸும் ”அச்சூடகம், இலத்திரினியல் ஊடகம்” என்ற தலைப்பில் அஷ்ஷைய்க் எம். முஹிதீனும் விரிவுரைகளை நடாத்தினார். அதனைத் தொடர்ந்து ”சமூக ஊடகமும் தஃவாவும்” என்ற தலைப்பில் வாமி ஊடகப் பிரிவு பொறுப்பாளர் றாஷித் நுஃமான் விரிவுரை நகழ்த்தினார். ஊடகத்தை எவ்வாறு தஃவாவுக்கு பயன்படுத்தலாம் என்ற குழுக்கலந்துரையாடலும் இடம்பெற்றது. இறுதியாக கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)