பரிசில்கள் அள்ளி வழங்கும் வாமியின் கட்டுரைப் போட்டி

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டை நோக்காகக்கொண்டு கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக பல்வேறு முயற்சிகளை வாமி நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த வகையில், இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் அவர்களது வரலாற்றைத் தொகுப்பதற்கு வாமி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெறுமதியான பரிசில்களை அள்ளி வழங்கும் ஒரு கட்டுரைப் போட்டியாக இந்த வரலாற்றுத் தொகுப்பை மேற்கொள்வதற்கு வாமி திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறது.

இப்போட்டி தொடர்பான ஒழுங்கு விதிகள் பின்வருமாறு:

1. இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு வயதெல்லை கிடையாது.

2. தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மும்மொழிகளில் ஏதாவதொன்றில் கட்டுரை அமையலாம்.

3. கட்டுரையின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட உசாத்துணைகள் குறிப்பிடப்படல் வேண்டும்.

4. இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் இடம்பிடித்த பிரபலங்கள் கட்டுரையின் தலைப்பாக அமையவேண்டும்.

ஏம்.எம்.ஏ. அஸீஸ், அறிஞர் சித்திலெப்பை, ஒராபி பாஷா, கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, டீ.பீ. ஜாயா மற்றும் நளீம் ஹாஜியார் போன்றோர் மாத்திரமின்றி மக்கள் மத்தியில் பிரபல்யமாகாத ஆனால், இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு உழைத்த ஒருவர் பற்றியும் கட்டுரை அமையலாம்.

(குறிப்பு: பிரபல்யம் குறைந்தவர்கள் தொடர்பாக எழுதப்படும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

5. போட்டிக்காக எழுதி அனுப்பப்படும் கட்டுரைகள் அனைத்தினதும் பதிப்புரிமை வாமி நிறுவனத்துக்குரியதாக கருதப்படும்.

6. முதல் மூன்று இடங்களுக்கான பரிசில்களாக முறையே ரூபா பத்தாயிரம்(10,000/=) ஏழாயிரம்(7,000/=), ஐயாயிரம்(5,000/=) வீதம் வழங்கப்படவுள்ளது. இது தவிர 2,000/= ரூபா பெறுமதியான ஆறுதல் பரிசில்கள் பத்தும் தெரிவுசெய்யப்படவுள்ளது.

7. ஆக்கங்கள் அனைத்தும் சுயமாக எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒருவர் எத்தனை ஆக்கங்களையும் எழுதலாம். ஒருவரின் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்கள்   பரிசுக்குரியதாக தெரிவாகும் பட்சத்தில், ஒன்று பரிசுக்குரியதாகவும் மற்றது ஆறுதல் பரிசுக்குரியதாகவும் கருதப்படும்.

8. கட்டுரை, தெளிவான கையெழுத்தில் அல்லது type செய்யப்பட்டு A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மேற்படாமல் அமையப்பெற்றிருத்தல் வேண்டும்.

9. கட்டுரைகள் அனைத்தும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் 658/83, Mawila Gardens, Colombo-09 என்ற வாமி காரியாலயத்துக்கு நேரடியாகவோ தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைப்பது வரவேற்கத்தக்கதாகும்.

10. பரிசில்களுக்கான கட்டுரைத் தெரிவின் போது நடுவர்களின் தீர்மானமே இறுதியானதாக கருதப்படும்.

இப்போட்டி தொடர்பான மேலதிக தகவல்களை வார நாட்களில் காரியாலய நேரத்தில் 0114616652 என்ற  இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)