வினைத்திறன்மிக்க குத்பாக்களை வழங்குதல்

வினைத்திறன்மிக்க ஜும்ஆ பிரசங்கங்களை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பள்ளிவாசல் கதீப்மார்களுக்கான விஷேட ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றை வாமி தஃவா பிரிவு வவுனியா ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து நடாத்தியது. இக்கருத்தரங்கு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி வவுனியா ரோயல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதிலே 57 கதீப்மார்கள் கலந்துகொண்டனர்.

ஒரு கதீபிடம் இருக்க வேண்டிய பண்புகள், பிரசங்கத்தை முன்வைத்தலுக்கான ஒழுங்கு முறைகள், ஒரு சிறந்த பிரசங்கத்துக்கு அறிவு ரீதியாக தயார்படுத்தல், சமூக, கால, நேரத்தை கருத்திற்கொள்வதன் அவசியம் ஆகிய தலைப்புகளில் விரிவுரைகள் முறையே அஷ்ஷைய்க் அய்யூப் அலி, சகோதரர் இஸ்மாஈல் அஸீஸ், கலாநிதி அஷ்ஷைய்க் எச்.எல்.எம். ஹாரிஸ் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

கருத்தரங்கின் இறுதியில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் சிறப்பு விருந்தினராக வவுனியா கிளையின் ஜம்இய்யதுல் உலமா பிரதித் தலைவர் அஷ்ஷைய்க் முஹம்மத் தாஹிர் கலந்து சிறப்பித்தார்.

யுத்தத்துக்கு பின்னர், வாமி தமது செயற்திட்டங்களை வடக்கிலும் நடாத்த முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)