இன்றைய நாளை மறந்து வாழ்வதற்கு

 

1. அடுத்தவர்கள் உங்களைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்களை அலட்டிக் கொள்ளாதீர்கள்

பெரும்பாலான விடயங்களில், அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ன கூறுவார்கள் என்பது முக்கியமானதன்று. நான் இளைஞனாக இருக்கும் போது உயர்நிலைப் பாடசாலையிலும் கல்லூரியிலும் இருந்த  ஊக்கக் குழுவினர் எனது தீர்மானங்களிலும் செல்வாக்குச் செலுத்தினர். நான் உறுதியாக நம்பிய கருத்துக்களையும் இலக்குகளையும் விட்டு என்னை அவர்கள் தூரப்படுத்தினர். இது எவ்வளவு மடத்தனமான செயல்? குறிப்பாக நான் அவர்கள் அனைவரினதும் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்ததை பல வருடங்கள் கடந்து எண்ணிப் பார்க்கும் போது அது எவ்வளவு மடத்தனமான செயல் என்பதை  நான் எனது வாழ்வின் ஓர் அங்கமாக இல்லாத அடுத்தவர்களின் கருத்துக்களை அதிகம் கவனத்தில் எடுத்துள்ளேன் என்பதை இப்போது தான் உணர்கின்றேன். 

நீங்கள் மிகச் சிறந்த முதல் மனப்பதிவை ஏற்படுத்த முற்படும் (தொழிலுக்கான நேர்முகப் பரீட்சை, முதற் சந்திப்பு போன்ற சந்தர்ப்பங்களின்) போது தவிர வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடுத்தவர்களின் கருத்துக்கள் உங்கள் வழியில் தடையாக இருப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கீன்றீர்கள் என்பதே முக்கியமானது. 

2. பிறர் மனம் புண்படாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தாதீர்கள்  

தணிக்கையும், அடுத்தவர்களை திருப்திப்படுத்தக்கூடியவாறு எவ்வாறு பேசுவது என்பதும் ஒருவரின் உள்ளக மனதின் சக்தியை இழக்கச் செய்வதில் எவ்வாறு பங்களிக்கின்றன என்பது பற்றிய நண்பர் ஒருவருடன் நான் நேற்றுக் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். இக்கலந்துரையாடலின் போது நான் அவரை மிகவும் உன்னிப்பாக அவதானித்தேன். அவர் தனது மனதில் உள்ள சில விடயங்களை என்னிடம் கூற முற்பட்டு பதற்றத்துக்கு உள்ளாவதையும் அவரே தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வதையும் நான் அவதானித்தேன். எனக்கு அது மிகவும் தெளிவாகப் புரிந்தது. அதனால் அது தொடர்பாக அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன் நீங்கள் எதையோ மறைத்தீர்கள் அல்லவா?” என்று நான் கேட்டபோது அவர் சிரித்து விட்டு முகத்தைத் தாழ்த்திக் கொண்டார். 

ஒவ்வொருவரது தலையிலும்  அவர்களை  மேற்பார்வை செய்கின்ற  ஒரு காவல் நாய் இருக்கின்றது. அது எப்போதும் உங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றது. அது உங்கள் குடும்பத்தால், நண்பர்களால், சக ஊழியர்களால், தொழில் முதல்வர்களால், பரந்தளவில் நோக்கும்  போது சமூகத்தால் உருவாக்கி வளர்த்துவிடப்பட்டுள்ளது. அதன் ஒரே நோக்கம் உங்களை அவதானித்து நீங்கள் சரியான வழியில் இருப்பதை உறுதிப்படுத்துவதாகும். நீங்கள் இந்தக் காவல் நாய்க்குப் பழக்கப்படும் போது நீங்கள் அதன் கருத்துக்கு ஏற்றவாறு சிந்திக்க முற்படுவீர்கள். அது எது சரி எது பிழை என்று கூறுபவற்றை  முடிந்த உண்மைகளாக நம்ப முற்படுவீர்கள். ஆனால் இந்த காவல்நாயின் கருத்துக்கள் உண்மைகளல்ல. மாறாக அவை வெறும் கருத்துக்களே - நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இல்லாதவிடத்து சக்தி வாய்ந்த கருத்துக்கள் உங்களை முழுமையாக மூளைச் சலவை செய்யும் ஆற்றல் மிக்கவையாகும். 

இந்த காவல் நாய் வெறுமனே எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற காவல் நாய் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனால் உண்மையாக உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் இந்த மனப்பாங்கிக்கு எதிராக துணிச்சலுடன் எழுந்து நிற்கத் தீர்மானிப்பீர்களாயின் அந்தக் காவல் நாயினால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. 

நீங்கள் வெறுமனே ஒரு முட்டாளைப் போன்று  செயற்படவோ சபிக்கவோ முற்படக் கூடாது. மாறாக நீங்கள் எதைக் கூறவேண்டுமோ அதை கூற வேண்டிய நேரத்தில் கூற வேண்டும். அது பிறர் மனதைப் புண்படுத்துவதாக இருப்பினும் சரியே. 

உங்களை நீங்களே தணிக்கை செய்ய வேண்டாம். உண்மையை, அதுவும் உங்களது உண்மையைப் பேசுங்கள். 

3. அனைத்தையும் ஒரே கோணத்தில் பார்ப்பதனை நிறுத்துங்கள் 

ஆடைகளை உடுத்துவதற்கோ உங்கள் முடியை சீவுவதற்கோ சரியான வழிமுறையென்று ஒன்றும் இல்லை. நீங்கள் கோமாளியைப் போன்று  அல்லது அடுத்தவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் என்று நான் கூறவில்லை. வித்தியாசமான முடிவுகளை வேண்டுமென்றே எதிர்பார்க்க முற்படுபவர்கள் அவற்றைக்  கண்டுகொள்வார்கள். 

நீங்கள் நீங்களாக, இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த தனித்துவமான  முறையில் நீங்கள் நீங்களாக இருக்கவேண்டும். உங்களுக்கு எத்தகைய ஆடைகளும் வடிவமைப்புக்களும்  சிறந்தது என்று நீங்கள் நினைப்பற்றையே அணியுங்கள். நீங்கள் உங்கள் வழியில் ஆடை  அணியுங்கள். 

நீங்கள் தனித்துவமான ஒருவர்.  அதனால்  வேறு ஒருவரைப் போன்று தோற்றமளிப்பதற்கு முற்படுவது உங்கள் அழகை வீணடிக்கும். இந்த உலகம் சிறுபிள்ளைத்தனமாக, நீங்கள் அடுத்தவர்கள் அனைவரையும் போன்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். அதனைப் பொருட்படுத்தாது உங்களுக்கே உரிய பாணியில் வாழ்வதற்கு தைரியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் 

4. அடுத்தவர்கள் உங்களுக்காக விரும்புவற்றைப் பற்றி அலட்டிக் கொள்வதை நிறுத்துங்கள் 

துரதிஷ்டவசமாக, உங்கள் கனவுகளை  நோக்கிய சரியான பயணத்தை ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னர் கூட, உங்களைச் சுற்றியுள்ள மக்கள் சிலவேளை உங்கள் மீது ஆழமான அன்பு கொண்டவர்கள் கூட, உங்களுக்கு எச்சரித்து அறிவுரை கூறுவர். அதற்குக் காரணம் அவர்களது தீய நோக்கங்களன்று. உங்கள் கனவுகள் என்ன? உங்கள் ஆர்வங்கள் என்ன ? உங்கள் வாழ்வின் இலக்குகள் என்ன ? என்பன  போன்ற பெரிய விடயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாதிருப்பதே அதற்குக் காரணமாகும். உங்களால் மேற்கொள்ளப்படும் பிரயத்தனத்திற்கு சன்மானம் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்  

அதனால் தான் அவர்கள், நீங்கள் தோல்வியடைந்துவிடுவீர்களோ என்ற அச்சத்தினால் உங்களைத் தடுக்கின்றனர். அது உங்கள் கனவுகள் நனவாகும் சாத்தியத்தையும் தடுத்துவிடும். 

ஸ்டீவ் ஜொப்ஸ் கூறுவதைக் கேளுங்கள் :  

உங்கள் நேரம் வரையறுக்கப்பட்டது. அடுத்தவர்கள் கூறுவது போன்று வாழ்வதற்காக  நேரத்தை வீணடிக்க வேண்டாம். அடுத்தவர்களின் சிந்தனையின் பெறுபேறுகளின் அடிப்படையில் வாழும் கொள்கையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களின் கருத்துக்களால் ஏற்படும் இரைச்சல் உங்கள் உள் மனதின் ஆற்றலை, இதயத்தை, அகப்பார்வையை மூழ்கடிப்பதற்கு இடமளிக்க வேண்டாம். நீங்கள்  உண்மையிலேயே எந்த நிலையை அடைய விரும்புகீன்றீர்கள் என்பதை  அவர்கள் ஓரளவே அறிந்து வைத்திருப்பார்கள். அவை தவிர அனைத்தும் இரண்டாம் தரமானவையே.

5. பிறர் ஏற்படுத்திய வரம்புகளைப் பற்றி அலட்டிக்கொள்வதை நிறுத்துங்கள் 

நீங்கள் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்ட போதிலும் நீங்கள் செய்யப் போவது நடக்காத விடயம் எனக் கூறுபவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். அல்லது அவர்கள் உங்கள் கருத்து அல்லது கனவு முழுமையாக நகைப்புக்குரியதாக இருப்பதனால் ஒருவரும் உண்மையில் கவனத்திற் கொள்ள மாட்டார்கள் என்று தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறானவர்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு விளக்கங்கள் கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் கிடைக்காது. அதனால் அப்படியானவர்கள் இருப்பதையே மறந்துவிடுங்கள். அவர்கள் உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பவர்களாகவே இருப்பர். 

நீங்கள் எதை விரும்புகின்றீர்களோ அதைச் செய்யுங்கள். எங்கு போக விரும்புகின்றீர்களோ அங்கு செல்லுங்கள். நீங்கள் உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றுங்கள். பிழையான தெரிவுகளைப் பின்பற்றாதீர்கள். அடுத்தவர்கள் உங்களைச் சுற்றி வேலி  போடுவதற்கு இடமளிக்காதீர்கள். குறிப்பாக உங்கள் தலையிலுள்ள காவல் நாய் கூறுபவற்றைக் கேட்காதீர்கள். 

உங்களால் சில விடயங்களைச்  செய்ய முடியாது என்று அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் போதெல்லாம் அவர்கள் தங்களது வரையறைகளுக்குள் நின்று தான் பேசுகின்றார்கள் என்பதை உங்கள் மனதில் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அவர்களைக் கவனத்தில் எடுக்காது உங்கள்  வழியில் நீங்கள் செல்லுங்கள். 

6. அடுத்தவர்களிடம் உள்ளவற்றைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்  

உங்களை நீங்கள் உங்கள் தோழர் ஒருவருடன், அயலவர் ஒருவருடன், நண்பர் ஒருவருடன் அல்லது சில பிரபலங்களுடன் ஒப்புநோக்குவதாக உணர்ந்தால், அதனை உடனடியாக நிறுத்துங்கள். நீங்கள் அவர்களிலிருந்து வித்தியாசனமவர், உங்களுக்கு வித்தியாசமான ஆற்றல்கள் உள்ளன. அவ் ஆற்றல்கள் அவர்களிடம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.  ஒரு கனம் அமைதியாக இருந்து உங்களிடமுள்ள அற்புதமான ஆற்றல்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள். உங்கள் வாழ்வில் உங்களுக்கு கிடைத்துள்ள நல்ல விடயங்கள் அனைத்துக்காகவும் நன்றி செலுத்துங்கள். 

எங்களில் அதிகமானோருக்குள்ள பிரச்சினை நாம் வாழ்வில் குறித்ததொரு மட்டத்தை - அடுத்தவர்கள் இயங்குகின்ற ஒரு மட்டத்தை - அடைந்து விட்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று சிந்திப்பதாகும். உங்கள் தொழில் முதல்வரைப் போன்று ஒரு அலுவலகம் கிடைத்தால், உங்களின் நண்பனின் நண்பனுக்கு கடற்கரையில் உள்ளது போன்ற வீடு ஒன்று கிடைத்தால் மகிழ்ச்சயாக இருக்க  முடியும் என்று சிந்திக்கின்றோம். துரதிஷ்ட வசமாக நீங்கள் அந்த நிலையை அடைவதற்கு சில காலம் எடுத்து அந்த நிலைக்கு வரும் போது உங்களுக்கு வேறு ஒரு இலட்சியம் மனதில் உருவாகியிருக்கும். 

அதனால், இப்போது நீங்கள் எங்கு இருக்கின்றீர்களோ இப்போது உங்களிடம் என்ன இருக்கின்றதோ அதனை நன்றியுணர்வுடன் பாருங்கள். உங்களை உங்களை விடத் தாழ்ந்த மட்டத்திலுள்ளவர்களுடன், பெரும் துன்பத்தில் வாழ்பவர்களுடன், உயிர்வாழ்வதற்காகப் போராடிக் கொண்ருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் எத்தனையோ விடயங்களுக்காக நன்றிக் கடன்பட்டவர்கள் என்பது தெரியவரும். 

7. கற்பனையிலான பூரணத்துவம் பற்றிய அலட்டிக் கொள்வதை நிறுத்துங்கள்  

பூரணத்துவம் என்பது நல்லவற்றின் எதிரியாகும். 

எங்களில் அதிகமோனோர் நாங்கள் சரியெனக் காண்பவற்றை பூரணமாக எதிர்பார்க்கும் பூரணத்துவவாதிகளாக உள்ளனர்.  ஒரு காலத்தில் எங்களுக்கு நாங்களே உயர் வரையறைகளை ஏற்படுத்தி அவற்றை நோக்கிப் பயணித்தோம் என்பதை நான் அறிவேன். எமது தனிப்பட்ட  உயர் நியமங்களைப் பேணுவதற்கான வேலைகளுக்காக அதிகளவு நேரத்தையும்  கவனத்தையும் செலவிடுகின்றோம். மிகச் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற எமது ஆசை, நின்றுவிடாது, மந்தகதியை அடையாது நீண்ட தூரம் செல்வதற்கு, எமக்கு உந்துதலாக அமைகின்றது. பரிபூரண நிலையை நோக்கிய எமது இந்த அர்ப்பணிப்பு சிறந்த பெறுபேறுகளை அடைவதற்கு எமக்கு  உதவுகின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை... அவ்வாறு செய்வதனால் தான் நாம் காலவோட்டத்தால் அடிபட்டுச் செல்லாமல் இருக்கின்றோம். 

ஆனால் பூரணவாதத்தினால் நாம் அடிபட்டுச் சென்றால் என்ன நடக்கும்?

எங்களுக்காக  நாங்களே உருவாக்கிக்கொண்ட (சாத்தியமற்ற அளவுக்கு உயர் தரத்திலான) நியமங்களை நாம் அடையத் தவறுகின்ற போது நாம் அதிருப்தியடைந்து ஊக்கத்தை இழக்கின்றோம். அது நாம் புதிய சவால்களை எதிர்கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்தும் அல்லது நாம் ஏற்கனவே ஆரம்பித்த பணிகளை பூர்த்தி செய்வதில் தயக்கத்தை ஏற்படுத்தும். நாம் அற்ப விடயங்கள் மீது அளவுக்கதிமாகச்  செலுத்தும் கவனம் எமது வினைத்திறனைக் குறைக்கும். பாரியளவிலான தாமதங்களை ஏற்படுத்தும். அதிகரித்த மன அழுத்தத்தையும் சராசரியை விடவும் குறைந்த பெறுபெறுகளையுமே பெற்றுத் தரும். 

உண்மையான பூரணத்துவவாதிகளுக்கு வேலைகளை ஆரம்பிப்பது கடினமானதாகவே இருக்கும். அவற்றை முடிப்பது அதனைவிடக் கடினமானதாக  இருக்கும் .... இந்நிலை தொடர்ந்து கொண்டே செல்லும். எனது நண்பர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் கிரஃபிக் டிசைன் பிஸ்னஸ் ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார். ஆனால், அவரால் அதனை இன்று வரை ஆரம்பிக்க முடியவில்லை. அதற்கு காரணம் என்ன? அவர் கூறும் நியாயங்களின் பட்டியலைப் பார்த்தால் அவருக்கு  ஒரே ஒரு பிரச்சினை மாத்திரமே இருப்பது தெரிய  வரும். அது அவர் ஒரு பூரணத்துவவாதியாக இருப்பதாகும்.  அதாவது தான் கிரஃபிக் டிசைன் பிஸ்னஸ் ஒன்றைச் சொந்தமாக நடாத்தும் அளவுக்கு தனக்கு கிரஃபிக்ஸ் டிசைன் அறிவு இல்லை என்று அவர் நினைப்பதே அந்தப் பிரச்சினையாகும். அவர் ஒருபோதும் தனக்கு போதியளவு அறிவிருப்பதாக நினைக்கவும் மாட்டார். 

இந்த உலகம் பூரணத்துவவாதிகளுக்கு சன்மானம் வழங்குவதில்லை. அது சாதிப்பவர்களுக்குத் தான் சன்மானம் வழங்குகின்றது. வேலைகளைச் செய்து முடிப்பதற்கு அவசியமான ஒரே வழி 99% பூரமணற்றிருப்பதாகும். பூரணமற்ற நிலையில் பலவருடங்கள் அனுபவப்படுதன் ஊடாக மாத்திரமே நாம் பூரணத்தவத்தின் சில அம்சங்களை அடைய முடியும். 

எனவே ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள். செயற்படுங்கள். விளைவுகள் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் அனைத்து விடயங்களிலும் இந்த இச்செயன்முறையை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். 

8. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்ற கவலையை விட்டுவிடுங்கள்  

நாங்கள் வித்தியாசமான தாளங்களுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்கின்றோம். சரியாவை மற்றும் பிழையானவை என்று முடிந்த முடிவுகள் மிகச் சிலவே உள்ளன. உங்களுக்கு சரியாக இருப்பது எனக்குப் பிழையாக இருக்க முடியும். அல்லது எனக்குச் சரியாக இருப்பது உங்களுக்குப் பிழையாக இருக்கவும் முடியும். மக்கள் தங்களுடைய வாழ்வை தங்களுடைய வழியில் - தங்களுக்கு சரியானது  என நினைக்கும் வழியில் - வாழ வேண்டும். 

விருப்புத் தேர்வுகளையும் கருத்துக்களையும் பொருத்தவரையில் அவற்றுக்காகச் சண்டை பிடிப்பது அர்த்தமற்றது.  உங்கள் மனைவியுடன், குடும்ப அங்கத்தர்வகளுடன் அல்லது அயலவர்களுடன் தர்க்கம் புரிவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உச்ச அளவில் கோபம் ஏற்பட்டு உங்கள் நாக்கு நுனியில் உள்ள கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொட்டிவிட வேண்டும்  என்று  தோன்றுமாயின் உங்களை வாயைப் பொத்திக்  கொண்டு அப்பால்  சென்று உங்கள் உள்ளத்தை அமைதியடைய விடுங்கள். நீங்கள் தர்க்கத்தில் சரியானவராக அல்லது வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. 

மாறாக, உங்கள் மனதில் புதிய சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் இடமளியுங்கள். வெறுமனே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மாத்திரம் பார்க்க வேண்டாம். அவர்கள் ஏன் அவற்றைச் செய்கின்றார்கள் என்பதைக் கண்டறிவதற்கும் நேரத்தைச் செலவிடுங்கள். 

9. தவறுகள் பற்றிய அலட்டிக்கொள்வதை நிறுத்துங்கள் 

தவறுகள் உங்களுக்கு பல முக்கியமான விடயங்களை போதிக்கின்றன. தவறு நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தினால் நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே நீங்கள் செய்யக் கூடிய மகா பெரிய தவறு. எனவே தயங்க  வேண்டாம் - உங்களை நீங்களே சந்தேகிக்க வேண்டாம். வாழ்க்கையில் வாய்ப்புக்கள் அரிதாகவே கிடைக்கின்றன. வாய்ப்புக்களை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது 100% வீதம் வேலை செய்யும் என்று உங்களால் கூற முடியாது. ஆனால்  ஒன்றும் செய்யாமல் இருப்பது 100% வேலை செய்யாது என்பதை உங்களால் உறுதியாக நம்ப முடியும்.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியிருக்கும். 

முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அது பிரச்சினையன்று. அது எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறே நடக்கும். ஒன்றில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அல்லது நீங்கள் அதிலிருந்து ஏதாவது ஒரு படிப்பினையைப் பெறுவீர்கள். இதனைத் தான் தீடிண-தீடிண  என்கின்றோம். நீங்கள் ஒரு போதும் செயற்படாமல் இருந்தால் நீங்கள் ஒருபோதும் எதனையும் அறிந்து கொள்ளமாட்டீர்கள். நீங்கள்  எப்போதும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பீர்கள். 

10. உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டவற்றைப் பற்றிய அலட்டிக்கொள்வதை நிறுத்துக்கள். 

சில சக்திகள் உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. வாழ்வின் இந்த யதார்த்த்தை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றிச் சிந்திப்பதற்காக உங்கள் நேரத்தையும், ஆற்றல்களையும், உணர்வுகளையும் வீணடிப்பதனால் விரக்தியும் கவலையும் தேக்க நிலையுமே ஏற்படும். 

உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட இத்தகைய விடயங்கள் தொடர்பில் உங்களால் செய்ய முடியுமான புத்திசாலித்தனமான ஒரே செயல் உங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்வதாகும். உங்கள் ஒட்டுமொத்த ஆற்றல்களின் மீதும் உங்கள் மனப்பாங்கு பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றது. நீங்கள் ஒரு குறித்த சூழ்நிலை தொடர்பான எதிர்மறையான பண்புகளை உள்வாங்கிக் கொள்வதனால், ஆக்கபூர்வமான எந்தவொரு பயனும் கிடைப்பதில்லை. மாறாக, நீங்கள் குறித்த சூழ்நிலையை ஏற்று நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்து ஆக்கபூர்வமாகவும் நேர்ச் சிந்தனையுடனும் நோக்குவீர்களாயின், நீங்கள் உங்களை பழைய நிலைக்கு கொண்டு வந்து வாழ்வைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும். 

பின்னோக்கிச் சென்று புதிதாக ஆரம்பிக்க ஒருவராலும் முடியாது. ஆனால் இன்றிலிருந்து ஆரம்பித்து புதியதொரு முடிவை உருவாக்க எவராலும் முடியும். என்ற மேரியா ரொபின்சனின் கூற்றை ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள். நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் அதற்கு  நீங்கள் எதிர் நடவடிக்கை எடுக்கும் முறையை மாற்ற முடியும்.  இன்று எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமான ஏதாவது நிகழும் என்று என்ற சிந்தனையுடன் நீங்கள் தினமும் காலையில் விழிப்பீர்களாயின், நீங்கள் உன்னிப்பாக அதனை அவதானித்து வருவீர்களாயின் அது உண்மை என்பதை அடிக்கடி கண்டு கொள்வீர்கள். இதற்கு மாற்றமாகச் சிந்திப்பீர்களாயின் அதுவும் அவ்வாறே நிகழும். எவ்வாறு அமைய  வேண்டும் என்று நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். 

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)