அரபு மொழி ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் -2013

அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று அக்குரனை மீதானிய்யா அரபுக் கலாசாலையில் இடம்பெற்றது. வாமி நிறுவனத்தினால் மே 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வொன்றுகூடலில் சுமார் 110 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

வாமி நிறுவன பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார். இலங்கைக்கான ஸவூதி அரேபயி தூதுவராலயத்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சகோதர்ர் ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் பிரதம அதிதியாக இதில் கலந்து சிறப்பித்தாமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கலாநிதி முஹம்மத் அஸ்ஹர், அஷ்ஷைய்க் முஹம்மத் நௌஷாத், அஷ்ஷைய்க் யூஸூப் முப்தி ஆகியோர் இதிலே கலந்துகொண்டு விரிவுரைகள் நிகழ்த்தினார்கள்.

அரபு கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக வாமி நிறுவனத்தினால் முதல்தடவையாக நடாத்தப்பட்ட இவ்வொன்று கூடல் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாவும் இடம்பெற்றது. இவ்வாறான ஒன்றுகூடல்கள் அடிக்கடி இடம்பெற்று ஆசிரியர்களுக்கு வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும் என கலந்துகொண்டோர் வாமி நிறுவனத்திடம் வேண்டிக்கொண்டனர்.

blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)