சீதனம் ஒரு சமூக அநீதி- சாந்தமறுதுவில் ஒரு நாள் நிகழ்ச்சி

சீதனம் ஒரு சமூக அநீதி என்ற கருப்பொருளில் ஒரு நாள் நிகழ்ச்சியொன்றினை வாமி நிறுவனம் கிழக்கு மாகான சாந்தமறுது பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடாத்துகின்றது. அப்பிரதேச மக்களை விழிப்பூட்டும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு அப்பிரதேச ஜம்இயதுல் உலமா தமது முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

குத்பாக்கள், பெண்களுக்கான விஷேட உரைகள், புத்திஜீவிகள், உலமாக்கள் என்போருக்கான செயலமர்வுகள் என பல நிகழ்ச்சித்திட்டங்களை இந்நிகழ்வு உள்ளடக்கியுள்ளது. வாமி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எச்.எல்.எம். ஹாரிஸ் ஜம்இயதுல் உலமா கொழும்பு கிளைப் பொறுப்பாளர் அஷ்ஷைய்க் யூஸுப் முப்தி, ஜாமியா நளீமிய்யா கலாபீட உதவிப் பணிப்பாளர் அஷ்ஷைய்க் சி. அய்யூப் அலி  உண்மைய உதய சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்ஷைய்க் இஸ்மாயீல் ஸலபி உற்பட நாட்டின் பல முக்கிய உலமாக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'சீதனம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு சிறு நூலும் வெளியிடப்பட்டு அப்பிரதேச வாழும் 5000 குடும்பங்கள் மத்தியில் பங்கிடப்படவுள்ளமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.

dowry-2
blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)