சாதனையாளர்களுக்கான பரிசளிப்பு விழா

வாமி நிறுவனத்தின் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் தந்தையை இழந்த மாணவர்களின் சாதனையை கௌரவிக்கும் முகமாக பரிசளிப்பு விழா ஒன்று நடைபெற்றது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தர‌, க.பொ.த. உயர் தர பரீட்சைகளில் அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளே கடந்த மே மாதம் 28ம் திகதி, புதன்கிழமை கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற விழாவில் கொளரவிக்கப்பட்டனர். வாமியின் சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் நாடு பூராவும் பராமரிக்கப்படும் மாணவர்களில் 22 மாணவ மாணவிகள் இந்நிகழ்வின்போது பணப்பரிசில்களும் பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸவூதி அரேபிய தூதரகத்தின் மத விவகாரங்களுக்குப் பொறுப்பாளரான ஸாலிஹ் அல் பர்ராக் அவர்களும் கெளரவ அதிதிகளாக அமானா வங்கியின் பிரதம‌ நிறைவேற்று அதிகாரி (CEO) முஹம்மத் அஸ்மீர் அவர்களும் வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் ஸாஹித் அவர்களும் கலந்துகொண்டனர். 

மேலும் பல இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர்கள், அமைப்புக்கள், ஜமாத்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் தனவந்தர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு சிறுவர் பராமரிப்புத் திட்டத்தின் மாவட்ட, பிரதேச பொறுப்பாளர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு தமது பூரண ஆதரவை வழங்கினர்.

நிகழ்வில் வாமி சிறுவர் பராமரிப்புத் திட்டம் தொடர்பாக விளக்கும் வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது. நன்றியுரையை சிறுவர் பராமரிப்புப் பிரிவின் பொறுப்பாளர் அஷ்செய்க் அப்துல் ஹபீல் ஆற்றினார்.

சாதனைபடைத்த மாணவர்களை கொளரவிக்கும் இந்நிகழ்வானது சிறுவர் பராமரிக்கும் பிரிவு நடாத்தும் மூன்றாவது சாதனையாளர் பரிசளிப்பு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

5 4 3 1 6 2 8 10 7 9


blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)