புனித அல்குர்ஆனை அச்சிட்டு வெளியிடும் வைபவம்

வாமி நிறுவனம் புனித அல்குர்ஆன் பிரதிகளை இலங்கையில் அச்சிட்டு அதனை வெளியிடும் வைபம் ஒன்றை கடந்த ரமழான் மாதம் ஏற்பாடு செய்தது.

பல இஸ்லாமிய நிறுவனங்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உலமாக்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு வாமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிராஅத்தைத் தொடர்ந்து வாமி நிறுவன பணிப்பாளர் உஸ்தாத் உமர் இத்ரீஸ் கலந்துகொண்டோரை வரவேற்றதுடன் இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டை தெரிவித்தார். குறிப்பாக இப்பிரசுரத்துக்கு ஆசிச்செய்து தந்த அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவுக்கும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் அச்சிட முன்பு அதனை சரிபார்த்துதவிய அஷ்ஷைய்க் அல்-ஹாபிழ் அலியார் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து விஷேட உரை நிகழ்த்திய அஷ்ஷைய்க் அகார் முஹம்மத் குறிப்பிடுகையில் இன்று தாராளமாக அல்குர்ஆன் கிடைக்கப்பெறுகின்றது. மீண்டும் மீண்டும் அதனை அச்சிட வேண்டுமா என்று பொதுவாக முஸ்லிம்களிடையே ஒரு மனப்பதிவு இருக்கின்றது. இது ஒரு வெறும் பிரமை மட்டுமே. ஏனென்றால் ஒரு மதிப்பீட்டின் படி உலக முஸ்லிம்களின் சனத்தொகை குறைந்த பட்சம் 157 கோடி காணப்படுகின்றது. அந்த அளவு தொகை அல்குர்ஆன் அச்சிடப்பட்டுள்ளனவா என்பதும் அச்சிட்பட்டவை எல்லோருக்கும் கிடைக்கப்பட்டுள்ளவா என்பதும் கேள்விக்குறியே. எனவேää அல்குர்ஆன் இன்னும் பல இலட்சங்கள் அச்சிடப்பட வேண்டும். அந்த புனித வேலையையே இலங்கையில் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக சேவை செய்துவரும் வாமி நிறுவனம் செய்துள்ளது என வாமி நிறுவனத்தை வெகுவாகப் பாராட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பல நிறுவனங்கள் எல்லாக் காலங்களிலும் அல்குர்ஆன் பிரதிகளை அச்சிட்டு வெளியிட்ட போதிலும் முஸ்லிம்கள் சிறுதொகையாக இருக்கின்ற இலங்கை மண்ணைப் பொறுத்த வரையில் அப்பொறுப்பான பணியை யாரும் துணிந்து எடுக்க முன்வரவில்லை. அந்த வகையில் முதன் முதலாக இப்பணியை ஆரம்பித்து வைத்த வாமி நிறுவனத்தை உலமாக்கள் உட்பட நாம் அனைவரும் பாராட்ட கடமைபட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உஸ்தாத் உமர் இத்ரீஸ் விஷேட அதிதிகளாகக் கலந்துகொண்ட ஜாமியா நளீமிய்யா பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை ஜம்மியதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைய்க் எம்.எம்.ஏ. முபாரக், ஜாமியா நளீமிய்யா பிரதிப்ப பணிப்பாளரும் இலங்கை ஜம்மியதுல் உலமா பதில் தலைவருமான அஷ்ஷைய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்;ஷைய்க் வை.எல்.எம். நவவி, இலங்கை ஜம்மியதுல் உலமா உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷைய்க் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் வாமி நிறுவன ஆலோசனை சபை தலைவர் அஷ்ஷைய்க் நஜ்மான் ஸஹீத் ஆகியோருக்கு குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தார். இறுதியாக அஷ்ஷைய்க் எம்.என்.எம். றாஷிதின் நன்றியுரையுடன் வைபவம் முடிவுற்றது.

 

 

 

 

 

 


blog comments powered by Disqus
You are here:
World Assembly of Muslim Youth (WAMY- Sri Lanka)